Tuesday, January 20, 2009

திருநாரணன் தாள் பாட்டு

அகிலமெல்லாம் உய்ய ஆழ்வார்களுக்குஅருளி செய்தவன் திருவடி அல்லவோ பகலும் நல்லிரவும் நிலத் தேவர்கள் அனைவரும்மனதில் இருத்தும் திருவடி அல்லவோபுகலென்று அடைந்த ஸ்ரீராம முனிக்கு செல்வபிள்ளையாய் வந்தவன் திருவடி அல்லவோ அகலாமல் என்றும் காத்திடும் நம்மை திருநாரணன் திருவடி அல்லவோ(திருநாரணன் தாள்)

Saturday, January 10, 2009

ஆதி அம் சோதி

ஆதி அம் சோதி (சென்ற இதழின் தொடர்ச்சி )
எழுதியவர் செல்வி வத்சலா ராஜன்
யார் என்ன பேசினால் என்ன?ஆவர்களின் ஏசெல்லாம் ஆழ்வாருடைய பக்திக்கு உரம் போட்டாற்போல அமைந்து விடுகிறது .
சோதி போன்ற ஒளி வீசும் எம்பெருமானை அடைந்த பிறகு வேறு எதுவும் என்ன செய்ய முடியும்? என்று ''மாசறு சோதி"யைப் பாடுகிறார். இதனால் ஆழ்வார் பக்கம் வந்த பெருமாளைப் பார்த்து, ''முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ"என்று வியந்து பாடுகிறார். அது மட்டுமல்ல. ''நான் உனதாகி விட்டேன், நீ எனதாகி விட்டாய் ...இந்த சந்தோஷத்தை நான் என்னவென்று சொல்லுவேன் ...
''என்னதாவி மேலையாய், ஏர்கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்
உன்னதென்னதாவியும், என்னதுன்னதாவியும்
இன்ன வண்ணமே நின்றது என்றுரைக்க வல்லனே"
என்று பாடுகிறார்.
திருக்குறள் கீர்த்தனை
(தியாகபாரதி இதழில் இருந்து எடுத்தது)
ராகம்: குந்தலவராளி தாளம்: கண்ட சாபு

பல்லவி
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற --என்றார் முனிவர்

அனுபல்லவி
சடை முடியன் பூணாகி நகும் சிறிய நாகம்
இடம் மேவிச் சமா கொள்ளல் ஏற்றம் விவேகம்

சரணம்
இடருற்ற இபராஜன் எத்துணை பலவான்
மடு மீது மாபலம் பெற்றதே முதலை
இடம் முன்றினில் வாழும் இயல் பெற்ற மனிதா
இடமறிந்து இசை பாடு ஸ்ரீசேஷ தாசனோடு

Wednesday, January 7, 2009

திருநாரணன் தாள்

சின்னியின் வியப்பின் தொடர்ச்சி -:
ஆஹா அறிந்தேன் ஆனந்தம்
குதிரை என்பது எந்தன் பேர்
ஆஹா அறிந்தேன் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் ,
ஆனந்தம் எங்கள் பேர் ,
அனந்தம் எங்கள் ஊர் ,
எல்லாரும்--
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா .